பக்கம் எண் :

1222திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும், செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடி இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாடவல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.

கு-ரை: வீழிநாதன் திருவடியைச் சிரமேற்கொண்டு ஒழுகும் திருஞானசம்பந்தர் பரிந்துரைத்த பாடல் வல்லார் பெரியபூமியில் ஈசன் எனும் இயல்புடையோர் ஆவர் என்கின்றது. பரிந்து - அன்புகொண்டு.

திருஞானசம்பந்தர் புராணம்

ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்

தோங்கிய காழி உயர் பதியில்

வாழி மறையவர் தாங்கள் எல்லாம்

வந்து மருங்கணைந்தார்கள் என்ன

வீழி மிழலையின் வேதி யர்கள்

கேட்டுமெய்ஞ் ஞானமுண் டாரைமுன்னா

ஏழிசை சூழ்மறை எய்த ஓதி

எதிர்கொள் முறைமையிற் கொண்டு புக்கார்.

சிரபுரத் தந்தணர் சென்ற பின்னைத்

திருவீழி மேவிய செல்வர் பாதம்

பரவுதல் செய்து பணிந்து நாளும்

பண்பின் வழாத் திருத் தொண்டர் சூழ

உரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி

ஓங்கிய நாவுக்கரச ரோடும்

விரவிப் பெருகிய நண்பு கூர

மேவி இனிதங் குறையுநாளில்.

- சேக்கிழார்.