பக்கம் எண் :

 133. திருக்கச்சியேகம்பம்1225


1430. தோலுநூ லுந்துதைந்த வரைமார்பிற்

சுடலைவெண் ணீறணிந்து

காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த

கடவுள் கருதுமிடம்

மாலைவெண் மதிதோயு மாமதிற்

கச்சி மாநகருள்

ஏலநாறிய சோலைசூ ழேகம்ப

மேத்த விடர்கெடுமே. 4

1431. தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத்

தூமதி யம்புனைந்து

பாடனான் மறையாகப் பல்கணப்

பேய்க ளவைசூழ

_________________________________________________

கு-ரை: திருநீறணிந்த மார்பில் அரவம் அணிந்து, பெண்னை ஒருபால் விரும்பி, எரிக்கண் திருநடனத்தை விரும்பிய பிஞ்ஞகன் இடம், விண்ணளாவிய மாடமோங்கிய கச்சியுள் ஏகம்பம் ஆம்; அதனைச்சேர இடர்கெடும் என்கின்றது. பிஞ்ஞகன் - மயிற்பீலியையுடையான்.

4. பொ-ரை: மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.

கு-ரை: கரு மான் தோலும் பூணூலும் நெருங்கிய மார்பில் நீறணிந்து காலனைக் காய்ந்த கடவுள் கருதுமிடம், கச்சியுள் ஏகம்பம்; அதனை ஏத்த இடர்கெடும் என்கின்றது.

5. பொ-ரை: அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர்மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான் மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பல சூழப், புலால் வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி