பக்கம் எண் :

1226திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வாடல்வெண் டலையோ டனலேந்தி

மகிழ்ந்துட னாடல்புரி

சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ்

சேர விடர்கெடுமே. 5

1432. சாகம்பொன் வரையாகத் தானவர்

மும்மதில் சாயவெய்து

ஆகம்பெண் ணொருபாக மாக

வரவொடு நூலணிந்து

மாகந்தோய் மணிமாட மாமதிற்

கச்சி மாநகருள்

ஏகம்பத் துறையீசன் சேவடி

யேத்த விடர்கெடுமே. 6

_________________________________________________

மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.

கு-ரை: இதழோடு கூடிய அழகிய கொன்றைமலரை அணிந்த சடையிலே பிறைமதியைச் சூடி, நான்மறை பாடலாக, பேய்க்கணம் புடைசூழ, அனலேந்தி ஆடும் பெரியோன் சேரும் இடம் கச்சியுள் ஏகம்பம் என்கின்றது. சேடர் - உலகம் அழியத் தான் எஞ்சி நிற்பவர் சேர - தியானிக்க.

6. பொ-ரை: மேரு மலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரி நூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.

கு-ரை: மேருமலை வில்லாக முப்புரம் எரித்து, உடலில் ஒருபாகம் பெண்ணாக ஏற்று, அரவையும் நூலையும் அணிந்து கச்சியேகம்பத்துள் அமர்ந்த ஈசன் திருவடி ஏத்த இடர்கெடும் என்கின்றது. சாகம் - வில். சாபம் எதுகை நோக்கிச் சாகம் ஆயிற்று. தானவர் - அசுரர். ஆகம் - உடல். மாகம் - ஆகாயம்.