பக்கம் எண் :

 133. திருக்கச்சியேகம்பம்1227


* * * * * * 7

1431. தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத்

தூமதி யம்புனைந்து

பாடனான் மறையாகப் பல்கணப்

பேய்க ளவைசூழ

வாடல்வெண் டலையோ டனலேந்தி

மகிழ்ந்துட னாடல்புரி

சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ்

சேர விடர்கெடுமே. 5

1432. சாகம்பொன் வரையாகத் தானவர்

மும்மதில் சாயவெய்து

ஆகம்பெண் ணொருபாக மாக

வரவொடு நூலணிந்து

_________________________________________________

7 * * * * * * *

8. பொ-ரை: ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.

கு-ரை: பிறையணிந்த செஞ்சடையில் அரவத்தையும் அணிந்து, இடப்பாகத்து நாணோடு கூடிய இல்வாழ்க்கைக்குரிய உமாதேவியை வைத்து, மண்டையோட்டில் பிச்சை யேற்று, இராவணன் சிரம் பத்தும் இறுத்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது. வாள் நிலா - ஒளிபொருந்திய நிலா. புல்கு - தழுவிய. இல்வாழ்க்கை - மனையில் வாழ்தலையுடையாளாகிய உமாதேவி; தொழிலாகுபெயர். ஏண் - உறுதி. சேண் - ஆகாயம்.

9. பொ-ரை: பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த