மாகந்தோய் மணிமாட மாமதிற்
கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி
யேத்த விடர்கெடுமே. 6
1433. வாணிலா மதிபுல்கு செஞ்சடை
வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி
நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா வரக்கன்ற னீண்முடி
பத்து மிறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே. 8
_________________________________________________
சடையை யுடைய அந்தணனும் ஆகிய
சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய,
வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை
உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி
மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய
சோலைகளால் சூழப்பட்டு விளங்கும்
திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து
கெடும்.
கு-ரை: அயனும் மாலும் அடிவணங்க
அழல்வண்ணமாகிய பெருமான் உமாதேவியோடு
உறையுமிடம், வள்ளல்கள் வாழ்கின்ற கச்சியில்
ஏகம்பமாம்; அதனைத்தொழ வல்வினையறும்
என்கின்றது. கரவு - உள்ளதை மறைக்கும் வஞ்சம்.
மரவம் - மல்லிகை.
10. பொ-ரை: பருமையான உடலோடு
ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம்
உடலில் போர்த்து வலியவராய்த் திரியும்
புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப்
பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள்.
பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும்
கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித் தவனாகிய
சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு
ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.
கு-ரை: புறச்சமயிகள் கூறும்
கட்டுரைகளை நம்பாதீர்கள்; அவை அவர்கள் கட்டிய
கட்டுக்கள்; பகைவரது முப்புரங்களும் ஓரம்பினால்
உடையச்செய்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது.
குண்டுபட்டு - உடல்பருத்து. கூறை - ஆடை. விண்டவர் -
பகைவர்.
|