பக்கம் எண் :

 134. திருப்பறியலூர்வீரட்டம்1229


1434. பிரமனுந் திருமாலுங் கைதொழப்

பேரழ லாயபெம்மான்

அரவஞ் சேர்சடை யந்தண

னணங்கினொ டமருமிடம்

கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்

கச்சி மாநகருள்

மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ

வல்வினை மாய்ந்தறுமே. 9

திருச்சிற்றம்பலம்

_________________________________________________

11. பொ-ரை: அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம் பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.

கு-ரை: இப்பதிகம் வல்லவர்கள் புகழ் ஓங்கித் தேவர்களோடும் சேர்வர் என்கின்றது. ஏரின் ஆர் பொழில் - அழகு நிறைந்த சோலை. காரின் ஆர் - மேகங்கள் கவிந்த.

திருஞானசம்பந்தர் புராணம்

செம்பொன்மலைக் கொடிதழுவக் குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்குங் கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல் தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.

- சேக்கிழார்.