1439. குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை
விற்காமன்
விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 3
1440. பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே. 4
_________________________________________________
அமுதமாவான். மயானத்துள் நின்றாடும்
வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த
குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி
வைத்துள்ள பெருமானாவான்.
கு-ரை: மருந்தன் - பிணி தீர்க்கும்
மருந்தானவன்.
3. பொ-ரை: அறிவில் தெளிந்த
மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால்
சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும்
வீரட்டானத்து இறைவன் குளிர்ந்த சடைமுடியை
உடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணை
தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதி
தேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.
கு-ரை: கொடுஞ்சிலை - வளைந்த வில்.
விளிந்தான் - இறந்தான். வீந்து எய்த - இறந்து
பின்னரும் வர. செற்றான் - கொன்றவன்.
4. பொ-ரை: சிறப்புடையவர்கள்
வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய
பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து
இறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன்.
இவ்வுலகில் பிறவிஎடுக்கும் உயிர்கள் அடையும்
பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச்
செய்யும் ஒளி வடிவினன்.
கு-ரை: பிறப்பாதி எனவே
இறப்புமில்லான் என்பதுணர்த்தியவாறு. பிறப்பார்
பிறப்பு செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யுந்
தேசன் - பிறவியெடுக்கும் உயிர்கள் எய்தும்
பிறப்பிற்கும் சிறப்பிற்கும் முதலும் முடிவும்
அடையச்செய்யும் ஒளிவடிவானவன். சிறப்பாடு -
சிறப்பு. பாடு தொழிற்பெயர் விகுதி. விறல்
பாரிடம் - வலிய பூதகணம்.
|