பக்கம் எண் :

1232திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1441. கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டி லாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறிய லூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 5

1442. அரவுற்ற நாணா வனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே. 6

1443. நரையார் விடையா னலங்கொள் பெருமான்
அரையா ரரவம் மழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. 7

_________________________________________________

5. பொ-ரை: நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் கபாலி.

கு-ரை: கரிந்தார் - இறந்தவர். புரிந்தார் - வினைகளைப் புரிந்தவர். படுதம் - கூத்துவகை. அக்கூத்தினைச் சுடுகாட்டில் விரும்பி ஆடுபவன். புறங்காடு - சுடுகாடு. தெரிந்து ஆர் மறையோர் - ஆராய்ந்தறிந்த அந்தணர்.

6. பொ-ரை: தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.

கு-ரை: அரவு உற்ற நாணா(க) அனல் அம்பு அது ஆக செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான் எனப்பிரிக்க. செரு - போர். வெருவுற்றவர் - அஞ்சியவர்.

7. பொ-ரை: அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்