1444. வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே. 8
1445. விளங்கொண் மலர்மே லயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே. 9
_________________________________________________
பறியலூர் வீரட்டத்தில் விளங்கும்
இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை
உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன்,
இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.
கு-ரை: நரை - வெண்மை.
8. பொ-ரை: பெண் அன்னங்கள் ஆண்
அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை
உடையதும், மிகுதியான நெல்விளைவைத் தரும்
வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர்
வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய
இராவணனைக் கயிலைமலையின்கண் அகப்படுத்தி அவனை
வலிமை குன்றியவனாகும்படி கால்விரலால் அடர்த்து
எழுந்தருளி இருப்பவனாவான்.
கு-ரை: வளைக்கும் எயிறு -
கோரப்பல். அரக்கன் என்றது இராவணனை. ஏழை
அன்னம் திளைக்கும் படுகர் - பெண்ணன்னம் புணரும்
ஆற்றுப்படுகர்.
9. பொ-ரை: இளைய பூங்கொம்பு
போன்றவளாகிய உமையம்மையோடு இணைந்தும்,
இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும்
விளங்குபவனாகிய திருப்பறியல்வீரட்டத்து
இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும்
பிரமனும் கடல்வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால்
நடுங்கிய மனத்தை யுடையவராய்த் தன்னைத் தொழத்
தழல் உருவாய் நின்றவனாவான்.
கு-ரை: விளங்கு ஒண்மலர் -
விளங்குகின்ற ஒளிபொருந்திய தாமரைமலர்,
ஓதவண்ணன் - கடல்வண்ணனாகிய திருமால். துளங்கும் -
நடுங்கும். மனத்தார் என்றது அயனையும் மாலையும்.
|