1446. சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதா னடியார் பெருமான்
உடையன் புலியி னுரிதோ லரைமேல்
விடையன் றிருப்பறியல் வீரட்டத் தானே. 10
1447. நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவல மறும்பிறப் புத்தானே. 11
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
இணைந்து - ஒரு திருமேனிக்கண்ணே
ஒன்றாய். பிணைந்து - இடப்பாகத்து உடனாய்க்கூடி.
10. பொ-ரை: திருப்பறியல்
வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை
அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு
அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன். புலியின்
தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன்.
விடையேற்றினை உடையவன்.
கு-ரை: சமண் சாக்கியரோடு
அடைதற்கு அன்பிலாதான் என்க. பெருமான் - பெருமகன்
என்பதன் திரிபு. புலியின் உரிதோல் அரைமேல்
உடையன் எனக்கூட்டுக.
11. பொ-ரை: நல்ல நீர் பாயும்
சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்,
மணங்கமழும் நீர்வளமுடைய திருப்பறியல்
வீரட்டானத்து உறையும் புள்ளிகளையுடைய நீண்ட
பாம்பினை அணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய
இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய
துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.
கு-ரை: நறுநீர் - நல்லநீர்.
வெறிநீர் - மணம்பொருந்திய தேன். நீடவல
மறும்பிறப்பு அறும் எனக்கூட்டுக.
|