பக்கம் எண் :

 135. திருப்பராய்த்துறை1235


135. திருப்பராய்த்துறை

பதிக வரலாறு:

திருக்கருவூர் ஆனிலையைப் போற்றி, திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பராய்த்துறையை யடைந்தார்கள். அங்கே நெற்றித் தனிக்கண்ணர் கோயிலை நண்ணிக் கும்பிட்டுக் கோதில் தமிழ்ச்சொல் மாலையாகிய ‘நீறு சேர்வதொர்‘ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

பண்: மேகராகக்குறிஞ்சி

பதிக எண்: 135

திருச்சிற்றம்பலம்

1448. நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே. 1

149. கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே. 2

_________________________________________________

1. பொ-ரை: திருப்பராய்த்துறையில், கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர், திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத் தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.

கு-ரை: இப்பதிகம், திருப்பராய்த்துறைசேர் அண்ணல் நீறணிந்தவர், நேரிழைவைத்தவர், கொன்றையணிந்தவர், வேதர், வேதம் விரித்தவர் என அவரது பல இயல்புகளை எடுத்து விளக்குவது. கூறு - மேனியில் ஒருபாதி. பாறு - பருந்து.

2. பொ-ரை: பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய