திருஞானசம்பந்தரிடம்
முறையிட்டனர். அவரும் ‘மாதர் மடப்பிடி’
என்னும் பதிகத்தை ஓதினர். பாணனார்
யாழிலிட்டு வாசிக்க இயலாமையை
உறவினர்க்குணர்த்தினர். யாழையும் உடைக்கச்
சென்றனர். திருஞானசம்பந்தர் தடுத்து,
இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார்.
இறைவன் பெயர்
யாழ்மூரிநாதர். இறைவியின் பெயர்
மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி,
சதாமதுராம்பிகை. தீர்த்தம் தர்மதீர்த்தம்
தருமை ஆதின அருளாட்சியில் விளங்குவது.
இடம்
காரைக்காலிலிருந்து மேற்கே 1 கி.மீ.
உள்ளது.
84. திருக்குடந்தை
(கும்பகோணம்)
சோழநாட்டுக்
காவிரி வடகரைத்தலம். பெரிய நகரம்.
மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி இரயில்
வழியில் உள்ள இரயில் வண்டிநிலையம். அனைத்து
நகரங்களிலிருந்தும் கும்பகோணம் வரப்பேருந்து
வசதி உண்டு.
இத்தலம்
தேவாரங்களில் குடமூக்கு என வழங்கப்பெறும்.
பஞ்சக்குரோசத் தலங்கள் சூழ்ந்தது. கங்கை
யமுனை முதலிய ஒன்பது தீர்த்தங்களும் வந்து
வழிபடும் பெருமையுடையது. பதினான்கு
கோயில்களையும், பதினான்கு
தீர்த்தங்களையும் உடையது. ஒன்பதாம்
நூற்றாண்டுமுதல் சோழ அரசர்கள் இதனைத்
தலைநகராகக் கொண்டனர். சோழர்கள் இருந்த
இடமாகிய சோழமாளிகையும், இடிந்துபோன
பழங்கோயில்களும் இதன் பழமைக்கு
அறிகுறியென்பர் பெர்கூசன் என்னும் அறிஞர்1.
ஏழாம் நூற்றாண்டில் மூலைக் கூற்றம் என
வழங்கப்பட்டதென்பர் பர்னல்துரை.
இத்தலத்தில் (குரு, சிம்மராசியில்
பிரவேசிக்குங்காலமான) 12 வருஷத்திற்கு ஒருமுறை மகா
மகதீர்த்தத்தில் தென்னிந்திய மக்கள்
அனைவரும் நீராடுவர். இங்கேயுள்ள பாடல்பெற்ற
சிவத்தலங்கள் திருக்குடமூக்கு, குடந்தைக்
கீழ்க்கோட்டம், குடந்தைக் காரோணம்
என்பன. குடமூக்கு கும்பேசுவர சுவாமிகோயில்;
கீழ்க்கோட்டம் நாகேசுவரன் கோயில்;
காரோணம் காசி விசுவநாதர்கோயில்.
இவையன்றிச் சோமேசம் முதலிய பல கோயில்கள்
உள்ளன. இத்தலம் மூர்க்கநாயனார் வாழ்ந்த
தலம்.
_______________
1 Indian and Eastern Architecture
367 of 9.
|