இறைவன்
ஏகாம்பரநாதர், பெரிய கம்பர். இறைவி
காமாட்சியம்மை, ஏலவார்குழலி, விநாயகர்
விகடசக்கர விநாயகர், முருகன் மாவடிக்கந்தர்,
விருட்சம் மாமரம்.
தீர்த்தம் சிவகங்கை, கம்பாநதி
ஸர்வதீர்த்தம்.
இடம் காஞ்சிபுரம்
இரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ.
தூரத்தில் உள்ளது.
கல்வெட்டு:
இத்தலத்தைப்
பற்றிய கல்வெட்டுக்கள் பலவாயினும்
ஏகாம்பரநாதர் கோயிலைப்பற்றியன சிலவே.
இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்
பெற்றுள்ளவர்கள் முறையே திரிபுவனச்
சக்கரவர்த்தி இராஜராஜன், கோப்பரகேசரி
இராஜராஜன், திரிபுவனச்சக்கரவர்த்தி
குலோத்துங்கன் III, இராஜகேசரி குலோத்துங்கன்,
கோராஜகேசரி குலோத்துங்கன், பரகேசரி
உத்தமசோழன் ஆகிய இவர்களும், புவனேகவீரனும்,
விஜயநகர சதாசிவதேவன்,
வீரமல்லிகார்ச்சுனன், புக்கராயன் ஆகிய
இவர்களும் காகதீய அரசன் கணபதியும், சண்ட
கோபாலனுமாகிய இவர்களும் ஆவார்கள்.
இராஜராஜதேவன் I 27
ஆம் ஆண்டில் ஒருமாறன் தேவடிகளால் 5 கழஞ்சு பொன்
படையலுக்காகக் கோயில் பொக்கிஷத்தில்
சேர்க்கப்பட்டது1. புவநேகவீரன் என்ற
சமரலோகன். சகம் 1391-ல் பாண்டிய நாட்டிலுள்ள
இரண்டு கிராமங்களை ஏகாம்பரநாதர் கோயிலுக்கும்
காமாட்சியம்மன் கோயிலுக்கும் கொடுத்தமை
குறிக்கப்பட்டுள்ளது.2 காகதீய அரசன் கணபதி
காலத்து (சகம் 1172) மந்திரியாக ஆண்ட
சாமந்தகபோஜனால் ஒரு கிராமம் கொடுக்கப்பட்டது.3
86. திருவாரூர்
இத்தலம் மயிலாடுதுறை
அறந்தாங்கிப் பாதையில் உள்ள இரயில் வண்டிக்
கூட்டுநிலையம், ஸப்தவிடங்கத் தலங்களுள்
தலைமையானது. மயிலாடுதுறை, கும்பகோணம்,
மன்னார்குடி முதலிய நகரங்களிலிருந்து பேருந்துகள்
செல்கின்றன. வீதி விடங்கப் பெருமானே எல்லா
இடங்கட்கும் முதன்மையாய்த் திருமாலாலும்,
இந்திரனாலும் பூசிக்கப்பெற்ற சிறப்புடையார்.
ஆதலின், அவரைச்சூழ
_____________
1 54 of 1893, 2 25 of 1890.
3 26 of 1890.
|