பக்கம் எண் :

216திருஞானசம்பந்தர் வரலாறு(முதல் திருமுறை)


வரலாற்றையும், அவர் தம் அருள் நலங்களையும், அவர் அருளிய தேவாரத் திருமுறைகளின் பெருமைகளையும் விளக்கியுள்ளார்.

இவ்வாறு மிக விரிந்த புகழாளராகிய திருஞானசம்பந்தர் அருள் வரலாற்றைச் சருக்கமாகக் காண்போம்.

தோற்றம்:

சோழவள நாட்டில் பிரமபுரம் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரு திருப்பெயர்களை உடைய சீகாழிப்பதியில் கவுணியர் கோத்திரத்தில் அந்தணர்குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர்தம் அருமைத் துணைவியாராக அமைந்தவர் பகவதியார் எனப் பெறுவார். இருவரும் இணைந்து சிவநெறி போற்றி வாழ்ந்து வருங் காலத்தில் தமிழகத்தில் சமண புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்தது. மக்கள் பூதி சாதனங்களைப் போற்றாது வாழத் தொடங்கினர். அவற்றைக் கண்ட சிவபாத இருதயர் பரசமயம் நிராகரித்து நீறாக்கும் மைந்தர் ஒருவரைத் தமக்குத் தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டி வந்தார்.

திருத்தோணிபுரத்து இறைவர் திருவருளால் அன்னை பகவதியார் மணிவயிறு வாய்த்தார்கள். ஞாயிறு முதலிய கோள்கள் உச்ச நிலையில்அமைந்த நற்பொழுதில், ஒரு திருவாதிரைத் திருநாளில், சிவநெறி சிறந்து விளங்கவும், தமிழ்மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவநெறி தழைக்கவும், திசைகளில் தென்திசையே சிறப்பெய்தவும், செழுந்தமிழ் வழக்கு ஏனைய மொழிகளின் வழக்கை வென்று மேம்படவும். இசைத்திறன் யாண்டும் நிலைபெறவும், இறையருள் விளக்கம் எங்கும் உண்டாகவும், புறச்சமயங்கள் பொலிவிழக்கவும் சீகாழிப்பதியில், எவ்வுயிர்க்கும் சிவமாந்தன்மையை வழங்கும் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார். அவரது தோற்றத்தால் எவ்வுயிர்களும் மகிழ்வுற்றன. வேதவிதிப்படி பெயரிடுதல், தொட்டிலிற் கிடத்தல் முதலிய சடங்குகள் உரிய காலங்களில் நிகழ்ந்தன. பகவதி அம்மையார் இறைவன் திருவடிபரவும்பேரன்பைத் தம் திருமுலைப்பாலுடன் கூட்டி ஊட்டி அன்பான அரவணைப்பில் ஆளுடைய பிள்ளையாரை வளர்த்து வந்தார்.

முன்னைப் பிறப்பில் சிவபிரானை வழிபட்டுச் சிவானந்தம்நுகர்ந்து வந்த பிள்ளையார்க்கு அவனிடமிருந்து வந்த பிரிவுணர்வு