இது ஞானசம்பந்தர்
வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரை
யாகும்.
சில நாட்கள் கழித்து
ஞானசம்பந்தர் மயேந்திரப்பள்ளி, குருகாவூர்,
முல்லைவாயில் முதலிய தலங்களைச் சென்று வணங்கி
மீண்டார். இது மூன்றாவது தலயாத்திரை.
திருநீலகண்ட
யாழ்ப்பாணர் தொடர்பு:
திருஞானசம்பந்தர்
மிக இளைய பருவத்திலேயே இறைவனால் ஆட்கொள்ளப்
பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை
வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும்
அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப்
பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர்
அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத்
திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப்
போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம்
அமைத்துக் கொடுத்தருளினார். திருநீலகண்டர் ஞானசம்பந்தர்
பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும்
பணியை மேற்கொண்டார்.
திருஞானசம்பந்தர்
அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக்
கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே
ஆலயத்தினுட்சென்று பேரம்பலத்தை வணங்கிக் ‘கற்றாங்கு
எரியோம்பி’ ‘ஆடினாய்நறுநெய்’ என்பனவாகிய திருப்பதிகத்தால்
போற்றி வழிபட்டார். அத்தலத்தில் தங்குதற்கு
மனமின்றி திருவேட்களத்தில் தங்கியிருந்து நாள்தோறும்
தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும்
நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல்வாயில் முதலிய
தலங்களை வழிபட்டார்.
திருநீலகண்ட
யாழ்ப்பாணர் தில்லையின் மேற்றிசையில்
வெள்ளாற்றின் கரையிலுள்ள தலங்களை வழிபட வேண்டுமென
வேண்ட ஞானசம்பந்தரும் அதற்கிசைந்து புறப்பட்டார்.
எருக்கத்தம் புலியூரை அடைந்தவுடன் ‘இத்தலம்
அடியேன் பிறந்த தலம்’ என யாழ்ப்பாணர் கூறக்கேட்டு
மகிழ்ந்து திருக்கோயிலுக்குச் சென்று பதிகம்
பாடிப்பரவினார்.
முத்துச் சிவிகை, குடை,
சின்னம் பெறல்:
ஞானசம்பந்தர் எருக்கத்தம்
புலியூரிலிருந்து திருமுதுகுன்றம்
|