சமணர்கள்
இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை
இவ்வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர்.
மன்னனும் உடன் பட்டான்.
ஞானசம்பந்தரும் சமண
முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர்
முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும்
‘அஸ்தி நாஸ்தி’ என்றவசனத்தை எழுதி
ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை
எதிர்க்கும் ஆற்றலி்ன்றி நீர் ஓடும்
நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட
சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி
நீரில் இடுக எனக்கூறினர். ஞானசம்பந்தர்,
திருப்பாசுரம் எனப்படும் ‘வாழ்க அந்தணர்’
என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை
ஏட்டில் எழுதச் செய்து அவ்ஏட்டை ஆற்றில்
இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக்
கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
அத்திருப்பதிகப்
பாடலில் ‘வேந்தனும் ஓங்குக’ என ஞானசம்பந்தர்
அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமி்ர்ந்து
நின்றசீர் நெடுமாறன் ஆயினான். குலச்சிறையார்
குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து
சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட
பிள்ளையார் ‘வன்னியும் மத்தமும்’ என்ற
திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ்வேடு
வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே
சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப்
பெற்றது. குலச்சிறையார் அதனை எடுத்து வந்து
ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார். அனைவரும்
கண்டு அதிசயித்து மகிழ்ந்தனர்.
சமணர்கள் தாங்கள்
செய்த சபதத்தின்படிக் கழுவேறினர்.
ஞானசம்பந்தர் பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர்
திருக்கோயில் சென்று ‘வீடலால வாயிலாய்’ என்ற
திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு
எழுந்தருளினார்.
பாண்டித் தலங்களைத்
தரிசித்தல்:
ஞானசம்பந்தர்
மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண
விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார்.
அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து
அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப்
பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த
தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக
இருந்ததே? என நலம் உசாவும் முறையில் ‘மண்ணில்
நல்ல வண்ணம்’ என்ற திருப்பதிகத்தை அருளிச்
செய்தார். பாண்டியனும் மங்கையர்க்கரசி
|