யாரும்
குலச்சிறையாரும் உடன் வர திருப்புத்தூர்,
கானப்பேர், சுழியல், குற்றாலம், நெல்வேலி முதலிய
தலங்களை வழிபட்டு இராமேச்சுரம் சென்றடைந்தார்.
திருமால் இராமாவதாரத்தில் தாபித்து வழிபட்ட
இராமநாதரைத் தரிசித்து அங்கிருந்தபடியே
ஈழத்தலங்களாகிய திருக்கேதீச்சரம்,
திருக்கோணமலை ஆகிய தலங்களை நினைந்து
போற்றினார்.
சோழநாடு மீளல்:
இராமேச்சரத்திலிருந்து
ஆடானை, புனல்வாயில், மணமேற்குடி ஆகியவற்றை
வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார்
அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து
அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம்,
திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு
திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.
ஓடம் உய்த்தது:
கொள்ளம்பூதூர்
எல்லையில் முள்ளியாறு வெள்ளத்தால் நிறைந்து
காணப்பட்டது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடம்
செலுத்துவோர் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக்
கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர்.
ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து
அடியவர்களுடன் தானும் ஏறிக் கொள்ளம்பூதூர்
இறைவனைப் போற்றிக் ’கொட்டமே கமழும்’ என்ற
திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஓடம் தானே
மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது.
ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து
எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால்
இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை
மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய
நள்ளாற்றிறைவன் மீது ‘பாடகமெல்லடி’ என்ற
பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத்
தொடர்ந்தார்.
புத்தரை வாதில்
வென்றது:
திருத்தெளிச்சேரியை
அடைந்து வழிபட்டுப் போதி மங்கை அருகே
ஞானசம்பந்தர் வரும்போது, அவரது முத்துச் சின்னம்,
காளம், ‘பரசமயகோளரி வந்தான் பாலறாவாயன்
வந்தான்’ என முழங்கிய ஓசை கேட்ட புத்த நந்தி,
தேரர் குழாத்துடன் வந்து தங்களோடு வாதிட
அழைத்தான். ஞானசம்பந்தருடன் வந்த அடியவர்
ஒருவர் அவர் அருளிய தேவாரங்களில் ‘புத்தர்
சமண்கழுக்கையர்’ என்ற பாடலைப் பாடி ‘புத்தன்
தலை இடி வீழ்ந்து உருளுக’ என உரைத்த அளவில் புத்த
|