பக்கம் எண் :

258திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


2. முற்றலாமையிள1 நாகமோடேன

முளைக்கொம்பவைபூண்டு

வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென

துள்ளங்கவர்கள்வன்

_________________________________________

என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின்மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.

குருவருள்: "தோடுடைய செவியன்" என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே "ஓம்" என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.

"ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்" என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று "சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்" எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண்பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் "ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த" என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.

2. பொ-ரை: வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசை வற்றிய பிரம கபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால்

____________________________________________

1கத்வா கைலாச மதுரம் மஹாதேவம் வ்யஜுக் ஞபன்
ததா தபதி தேவோயம் ஹத்வா கூர்மம் மகாபலம்
ஜக்ராஹ தஸ்ய ப்ருஷ்டாஸ்த்தி மகா கோரஸ்ய சங்கர:
தேவைஹி ஸம்ப்ரார்த்தி தோ தேவ: பபாரைதத் ப்ரஜாபதே.

- ஸ்காந்தம்