பக்கம் எண் :

 1. திருப்பிரமபுரம்259


கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல்

கையால் தொழுதேத்தப்

பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய

பெம்மானிவனன்றே. 2

3. நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்

நிலாவெண்மதிசூடி

ஏர்பரந்தவின வெள்வளைசோரவென்

னுள்ளங்கவர்கள்வன்

__________________________________________________

தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

கு-ரை: இதனால் இறைவன் அணிகளைக் கொண்டு அடையாளங்கள் அறிவிக்கப் பெறுகின்றன. முற்றல் ஆமை - ஆதி கமடமாதலின் வயது முதிர்ந்த ஆமை. ஆமை என்றது ஈண்டு அதன் ஓட்டினை. இளநாகம் என்றது இறைவன் திருமேனியையிடமாகக் கொண்ட பாம்பிற்கு நரை திரை யில்லையாதலின் என்றும் இளமையழியாத நாகம் என்பதைக் குறிப்பிக்க.

ஏனம் - பன்றி; ஆதிவராகம். வற்றல் ஓடு - சதை வற்றிய மண்டையோடு கலன் - பிச்சையேற்கும் பாத்திரம். பலி - பிச்சை, பெரியார்க்கிலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல் - உலக நூல்களை ஓதித் தருக்குவதன்று, இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அங்ஙனமே. இறைவன் புகழை யன்றி வேறொன்றையுங்கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என அதிகாரிகளை யறிவித்தவாறு. ‘கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்‘ ‘கற்றவர் வணங்குங் கற்பகக் கனியை‘ என்பன ஒப்புநோக்கற்குரியன. ‘கற்றல் கேட்டலுடையார் பெரியார்‘ எனவே, உபலக்கணத்தால் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகூடல் முதலியனவும் கொள்ளப் பெறும். "கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்" என்பது சிவஞான சித்தியார். தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தை ஊர்ந்தே இருக்கிறார் என்பதாம். பெற்றம் - இடபம்.

3. பொ-ரை: கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச்