ஊர்பரந்தவுல
கின்முதலாகிய
வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர
மாபுரமேவிய
பெம்மானிவனன்றே.
3
4. விண்மகிழ்ந்தமதி
லெய்ததுமன்றி
விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி
தேரியவந்தென
துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர
வம்மலர்க்கொன்றை
மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர
மாபுரமேவிய
பெம்மானிவனன்றே.
4
__________________________________________________
சூடி வந்து விரகமூட்டிக்
கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள்
கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த
கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க
இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இது
என்ற புகழைப் பெற்ற பிரமபுரம் மேவிய
பெருமானாகிய இவனல்லனோ!
கு-ரை: நீர் - கங்கை,
நிமிர்புன்சடை - நிறைந்த புல்லியசடை, ஓர் நிலா வெண்மதி
- ஒரு கலைப்பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை.
சோர - நழுவ, அவன் மதியைச் சூடியிருத்தலின் விரக
மிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். ஊர்
பரந்த உலகு - ஊர்கள் மிகுந்த உலகு. மகாப்பிரளய காலத்து
உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது
இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது
சீகாழி என்பது. பேர் - புகழ்.
4. பொ-ரை: வானவெளியில்
மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும்
கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல்,
விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு
பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்
புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால்
நிறைந்தவரை போன்ற மார்பின் இடப்பாகத்தே
உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப்
பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!
|