பக்கம் எண் :

266திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர்

மாயம்மிதுவென்னப்

பித்தர்போலும்பிர மாபுரமேவிய

பெம்மானிவனன்றே. 10

11. அருநெறியமறை வல்லமுனியகன்

பொய்கையலர்மேய

பெருநெறியபிர மாபுரமேவிய

பெம்மானிவன்றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்

பந்தன்னுரைசெய்த

திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை

தீர்தல்எளிதாமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: பொறிஇல் சமண் - அறிவற்ற சமணர்கள். புறங்கூற - நேர்நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமையாய்ச் சொல்ல. நெறி நில்லா - வரம்பில் நில்லாதனவாக. ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க. புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங்கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத் தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார்.

11. பொ-ரை: அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.