வினாவுரை
பண்: நட்டபாடை
பதிக எண்: 4
திருச்சிற்றம்பலம்
34. மைம்மரு
பூங்குழற் கற்றைதுற்ற
வாணுதன் மான்விழி
மங்கையோடும்
பொய்ம்மொழி
யாமறை யோர்களேத்தப்
புகலி நிலாவிய
புண்ணியனே
எம்மிறை யேயிமை
யாதமுக்க
ணீசவெ னேசவி
தென்கொல்சொல்லாய்
மெய்ம்மொழி
நான்மறை யோர்மிழலை
விண்ணிழி
கோயில் விரும்பியதே. 1
__________________________________________________
இதுமுதல் பத்துத்
திருப்பாடல்களும் புகலி நிலாவிய
புண்ணியனே! நீ வீழிமிழலையிலுள்ள விண்ணிழி விமானம்
விரும்பியது ஏன்? என
வினவுவதாக அமைந்துள்ளன.
1. பொ-ரை:
கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய
கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி
போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய்
பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும்
புண்ணியம் திரண்டனைய வடிவினனே, எம் தலைவனே!
இமையாத முக்கண்களை உடைய எம் ஈசனே!, என்பால்
அன்பு உடையவனே, வாய்மையே பேசும் நான்மறையை ஓதிய
அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால்
விண்ணிலிருந்து கொண்டுவந்து நிறுவப்பட்ட
கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம்
என்னையோ? சொல்வாயாக!
கு-ரை: மை மரு - கருமை
சேர்ந்த. பொய்மொழியா மறையோர்கள் - என்றும்
பொய்யேசொல்லாத வேதியர்கள்.
புகலி - சீகாழி. நேச -
அன்புடையவனே. மெய் மொழி நான்மறை - என்றும்
நிலைத்தமொழியினையுடைய நான்கு வேதம்.
மங்கையோடும் நிலாவிய, ஏத்த நிலாவிய புண்ணியன்
எனக்கூட்டுக.
குரவருள்: "பொய்
மொழியா மறையோர்" என்று காழி அந்தணர்களை
எதிர்மறையால் போற்றிய ஞானசம்பந்தர்
"மெய்ம்
|