பக்கம் எண் :

30ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை(முதல் திருமுறை)


இயற்றியவர் உமாபதிசிவம் என்பதை ஒத்துக்கொள்கிறார். உமாபதி சிவம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்.

இராஜராஜசோழன் காலத்திற்குப்பிறகு 300 ஆண்டளவில் வாழ்ந்தவர். இவர் இதுபற்றிச் சிந்திக்காமல் இருந்திருப்பாரா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் அபயகுலசேகரன் என்ற பெயர், சோழர்கள் யாருக்கும் பெயராக இருந்ததில்லை என ஆய்வு செய்துள்ளார். பட்டப் பெயராக நம்பியாண்டார் நம்பிகளே கொடுத்திருக்கலாம் என்று கொள்வதால் தவறேதும் இல்லை எனத் தோன்றுகிறது.

இடங்கழி நாயனாரையும், கோச்செங்கட் சோழ நாயனாரையும் சிற்றம்பலம் பொன்வேய்ந்தவர்கள் என்று நம்பிகள் சொல்கிறார். இதுபோன்ற குறிப்பு இராஜராஜனைப்பற்றி நம்பிகள் ஏதும் குறிப்பிடவில்லையே என்கிறார். இது சிந்தனைக்குரியதே.

முதலில் தேவாரம் பாடியவர்:

ஞானசம்பந்தர் அருளிய பதிகங்களைத் திருக்கடைக்காப்பு என்றும், நாவுக்கரசர் அருளிய பதிகங்களைத் தேவாரம் என்றும், சுந்தரர் அருளிய பதிகங்களைத் திருப்பாட்டு என்றும் பழமையில் வழங்கிய மரபையும் நாம் தெரிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.

ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்று போற்றப் பெறுபவர்கள். ஆனால் இவர்களில் முதன் முதல் தேவாரம் பாடியவர் யார் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் வரலாற்று அடிப்படையில் நலம் தரும் செயலாம்.

சுருங்கச் சொன்னால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்காலம் கி.பி. 615-630. இந்தக் காலத்தில்தான் அப்பர் பெருமான் சமண சமயத்திலிருந்து சைவம் சார்ந்தார். முதன்முதலில், "கூற்றாயினவாறு" என்று தொடங்கும் தேவாரம் பாடியருளினார். மகேந்திரவர்ம பல்லவன் விளைத்த இடர்களையெல்லாம் இறையருளால் வென்றார். மகேந்திரவர்மனும் மனம்திருந்தி சைவசமயம் சார்ந்து திருவதிகையில் குணபரவீச்சுரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். திருச்சிராப்பள்ளியிலும் மலைமீது குடைவரைக் கோயில் அமைத்தான். அவ்வரசன் சமணசமயத்தைச் சார்ந்திருந்ததும், நாவுக்கரசரால் மனம்திருந்தி சைவன் ஆனதும் அக்குடைவரைக் கோயிலில்