உள்ள கல்வெட்டுக்களால்
அறியப்படும் செய்தி. மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம்
நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சிக்காலம் கி.பி.
630-668. ஞானசம்பந்தர் அவதாரமே கி.பி. 638
என்று நரசிம்மவர்மன் காலமாகக் கணக்கிடுகின்றனர்.
கி.பி. 642இல் நரசிம்மவர்ம
பல்லவன் பரஞ்சோதியாரைப் படைத் தலைவராகக்
கொண்டு, வாதாபியை வென்று, அவர் சிவன்
அடியார் என்பதறிந்து, அவருக்குச் சிறப்புக்கள்
செய்து, நிரம்பப் பொருளும் கொடுத்து, சிவதொண்டு
செய்துவர விடுத்தான். இப்பரஞ்சோதியாரே சிறுத்தொண்டர்
எனப் போற்றப்படுவர். கி.பி. 642இல்
திருச்செங்காட்டங்குடி சேர்ந்து திருவெண்காட்டு
நங்கையை மணந்து சீராளதேவரைப்பெற்று மூவாண்டில்
பள்ளியில் சேர்த்தார். அப்பொழுது ஞானசம்பந்தர்
கி.பி. 645இல் திருச்செங்காட்டங்குடிக்கு
எழுந்தருளி இறைவனைத் தரிசித்து, சிறுத்தொண்டரையும்,
சீராள தேவரையும் "பைங்கோட்டு மலர்ப்புன்னை"
திருப்பதிகத்துள் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வரலாற்றினால்
மகேந்திரவர்ம பல்லவன் காலத்திலேயே வாழ்ந்து
அற்புதங்கள் நிகழ்த்திய அப்பரே முதலில் தேவாரம்
பாடியவர் என்பது தெளிவாகும்.
முதல் ஆசாரியர்:
முதலில் தேவாரம்
பாடியவர் என்ற சிறப்பு அப்பருக்கு இருந்தபோதிலும், ஆசாரியத்துவம்
யாருக்கு முதன்மையாக வழங்கியுள்ளார் இறைவன் என்பதையும்
தெரிந்துகொள்வது தெளிவுதரும் செயலாகும்.
சீகாழியில் பெருமான் ஞானசம்பந்தருக்குத்
தோடுடைய செவியனாய் விடையேறிக் காட்சிகொடுத்தான்.
அக்காட்சியைத் தன்னை ஈன்றெடுத்த தவமுடைய தாதைக்கு
அடையாளங்களுடன் சுட்டிக் காட்டினார் ஞானசம்பந்தர்.
ஆனால் அக்காட்சி சிவபாத இருதயருக்குப் புலப்படவில்லை.
அடுத்து, திருமறைக்காட்டில் கதவு திறக்கவும்
அடைக்கவும் பாடிய நிகழ்ச்சியால், நெகிழ்வுற்ற
அப்பரைத் திருவாய்மூர் வரச் சொன்னார் இறைவன்.
அதை ஞானசம்பந்தரும் உணர்ந்து அப்பருடன் பின் தொடர்ந்தார்.
திருவாய்மூர்ச் செல்வனாரும் ஞானசம்பந்தருக்குத்தான்
காட்சி நல்கினார். ஞானசம்பந்தர் காட்டக்
|