திருக்கொள்ளம்பூதூரை வழிபட்ட சிரபுரச் செல்வராகிய
திருஞானசம்பந்தப் பிள்ளையார், மதுரையில்
பாண்டியனது அவைக்களத்திலே, அனல்வாதத்தில்
பச்சைப் பதிகமாக இருந்த ‘போகமார்த்த’’இதில் நள்ளாறுடைய
நம் பெருமானே! அமணர் செய்த வாதில் தீயிலிடும்
ஏடு பச்சையாக்கி என்னுள்ளத்துணையாகி,
திருவாலவாயின்கண் அமர்ந்தவாறு என்னை? என்று
வினாவியருளுகின்றார். பச்சைப் பதிகமும்
‘போகமார்த்த பூண்முலையாள்’’வினாவுரை
பண்: நட்டபாடை
பதிக எண்: 7
திருச்சிற்றம்பலம்
65. பாடக மெல்லடிப்
பாவையோடும்
படுபிணக் காடிடம்
பற்றிநின்று
நாடக மாடும்நள்
ளாறுடைய
நம்பெரு மானிது
வென்கொல்சொல்லாய்
__________________________________________________
ஒன்று முதல் பத்துப்
பாடல்களும் நள்ளாறுடைய நம் பெருமானே! நீ
ஆலவாயினை விரும்பியவனாய் அங்கு உறைதற்குக்
காரணம் யாதோ சொல்வாயாக என்னும் வினை
முடிபுடையன.
1. பொ-ரை: பாடகம்
என்னும் அணிகலன் அணிந்த மென்மையான அடிகளை உடைய
உமையம்மையோடு, பிணக்காடாகிய இடுகாட்டைப்
பற்றி நின்று நாடகம் ஆடும் நள்ளாற்று நம்
பெருமானே! நீ