பக்கம் எண் :

318திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


புண்ணிய வாணரும் மாதவரும்

புகுந்துட னேத்தப் புனையிழையார்

அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்

ஆலவா யின்க ணமர்ந்தவாறே. 3

68. பூவினில் வாசம் புனலிற்பொற்புப்

புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு

நாவினிற் பாடல்நள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

தேவர்கள் தானவர் சித்தர்விச்சா

தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி

ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்

ஆலவா யின்க ணமர்ந்தவாறே. 4

__________________________________________________

இறைவனது புகழ் சேர்ந்த பாடல்களைப் பாடுவதுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: தண்ணறு மத்தம் - குளிர்ந்த மணம் வீசுகின்ற ஊமத்தம்பூ. இறைவனுக்கு உன்மத்த சேகரன் என்பதும் ஒருபெயர். கூவிளம் - வில்வம். தாங்கி உடைய பெருமான் என முடிக்க. யார்க்கும் நண்ணலரிய நள்ளாறு - எவர்க்கும் அணுக முடியாத நள்ளாறு. என்றது நாடிழந்தும் நகரிழந்தும் மனைவியையிழந்தும் உருமாறியும் வினையை நுகர்ந்து கழித்த நளன் போன்றோரன்றி வினைச் சேடமுடைய எவர்க்கும் நணுக முடியாதது என்பதை விளக்க. புண்ணியவாணர் - சென்ற பிறவிகளில் ஈட்டிய புண்ணியங் கொண்டு வாழ்பவர்கள். மாதவர் - இப்பிறவியில் புண்ணியம் ஈட்டுவார். அண்ணலின் பாடல் - இறைவனுடைய புகழ் சேர்ந்த பாடல்கள்.

4. பொ-ரை: பூக்களில் வாசனையாய், நீரில் தண்மையாய், புதிய சந்தனத்தில் மணமாய், நாவில் பாடலாய்க் கலந்து விளங்கும் நள்ளாற்று நம் பெருமானே! நீ, தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும், வித்யாதரர்களும் ஆகிய கூட்டத்தினரோடு சிறந்து விளங்குபவராய்ப் பசுவினிடம் தோன்றும் பஞ்சகவ்யங்களால் ஆட்டி வழிபடக் கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.