பக்கம் எண் :

320திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


70. பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு

பைவிரி துத்திப் பரியபேழ்வாய்

நாகமும் பூண்டநள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

போகமும் நின்னை மனத்துவைத்துப்

புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட

ஆகமு டையவர் சேருங்கூடல்

ஆலவா யின்க ணமர்ந்தவாறே. 6

71. கோவண வாடையும் நீறுப்பூச்சுங்

கொடுமழு வேந்தலுஞ் செஞ்சடையும்

நாவணப் பாட்டும்நள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

__________________________________________________

6. பொ-ரை: இடப்பாகமாக உமையம்மையை வைத்துக் கொண்டு, படமும் புள்ளிகளும் பெரிதாகப் பிளந்த வாயும் உடைய நாகத்தைப் பூண்டுள்ள நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, உன்னை மனத்தில் கொண்டு சிவபோகமும், புண்ணியர்களாம் அடியவர்கள் கூட்டுறவும் கொண்ட மேனியராகிய சான்றோர்கள் சேர்ந்துறையும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: பாகமும் தேவியை வைத்துக் கொண்டு நாகமும் பூண்ட என்றது பாம்பைக் கண்டாற் பெரிதும் அஞ்சுகின்ற தேவியை வைத்துக் கொண்டேயும் நாகம் பூணுதல் சாலாது என்ற நயந்தோன்ற நின்றது. பை - படம். துத்தி - படப்பொறி. பேழ்வாய் - பிளந்தவாய். புண்ணியர் நின்னை மனத்துவைத்துப் போகம் நண்ணும் புணர்வு பூண்ட ஆகமுடையவர் என இயைக்க. போகியாய் உமையொரு பாதியாய் இருக்கும் இறைவனைத் தியானிப்பதாலேயே புண்ணியர் போகம் நண்ணுவர் என்பதாம். புணர்வு - சம்பந்தம். ஆகம் - திரு மேனி.

7. பொ-ரை: வேதமாகிய கோவண ஆடையும் திருநீற்றுப் பூச்சும் கொடிய மழுவாயுதத்தை ஏந்தலும் சிவந்த சடையும் நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாய் இலங்கும் நள்ளாற்றுள் எழுந்தருளிய நம் பெருமானே! நீ பூப்போலும்