பூவண மேனி
யிளையமாதர்
பொன்னும் மணியும்
கொழித்தெடுத்து
ஆவண வீதியி
லாடுங்கூடல்
ஆலவா யின்க
ணமர்ந்தவாறே. 7
72. இலங்கை
யிராவணன் வெற்பெடுக்க
வெழில்விர லூன்றி
யிசைவிரும்பி
நலங்கொளச்
சேர்ந்தநள் ளாறுடைய
நம்பெரு மானிது
வென்கொல்சொல்லாய்
புலன்களைச்
செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியி
லுந்நினைச் சிந்தைசெய்யும்
அலங்க னல்லார்க
ளமருங்கூடல்
ஆலவா யின்க
ணமர்ந்தவாறே. 8
__________________________________________________
மெல்லிய மேனியை
உடைய இளம் பெண்கள் பொன்மணி முதலியவற்றைக்
கொழித்து எடுத்துக் கடைவீதியில் விளையாடும்
கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து விளங்கக் காரணம்
யாதோ? சொல்வாயாக.
கு-ரை: இறைவனுக்கு
வேதமே கோவணமாதலின் கோவண ஆடையர் என்றார்.
நீறுப்பூச்சும் - நீற்றுப்பூச்சும் எனற்பாலது ஓசைநோக்கி
இரட்டாதாயிற்று. இறைவன் நீறுபூசி ஒளிர்தலை மாணிக்கவாசக
சுவாமிகளும் ‘நீறுபட்டே ஒளிகாட்டும் மேனி’
8. பொ-ரை: இலங்கை
மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது,
தனது அழகிய கால் விரலை ஊன்றி அடர்த்துப் பின்
அவனது இசையை விரும்பிக்கேட்டு அவனுக்கு நன்மைகள்
பலவும் பொருந்துமாறு உளங் கொண்ட நள்ளாறுடைய நம்
பெருமானே! நீ, ஐம்புல இன்பங்களை வெறுத்து
அவற்றைத் தரும் ஐம்பொறிகளை மடை மாற்றிப்
புந்தியில் உன்னையே சிந்தனை செய்யும் தூய
வாழ்க்கையையுடைய சிவஞானிகள் வாழும் கூடல்
ஆலவாயின்கண் அமர்ந்துறைதற்குக் காரணம் யாதோ?
சொல்வாயாக.
கு-ரை: விரல் ஊன்றி
என்றது நிக்கிரகம். விரும்பி என்றது