பக்கம் எண் :

322திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


73. பணியுடை மாலும் மலரினோனும்

பன்றியும் வென்றிப் பறவையாயும்

நணுகல ரியநள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

மணியொலி சங்கொலி யோடுமற்றை

மாமுர சின்னொலி யென்றுமோவா

தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்

ஆலவா யின்க ணமர்ந்தவாறே. 9

__________________________________________________

கருணைக்கு ஏது. நலங்கொள என்றது அநுக்கிரகம். விரலூன்றிய வரலாற்றை மணிவாசகப் பெருந்தகை ‘மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி

புலன்களைச் செற்று - விஷயங்களைக் கெடுத்து. பொறியை நீக்கி - இந்திரியங்களைச் சேட்டியாதே செய்து. நினைப்புந்தியிலும் சிந்தை செய்யும் - தேவரீரைப் புத்தியாலும் தியானிக்கின்ற, பொறிகள் புலன்களின் வழிச்செல்லாது அடக்கிய பெரியோர்களின் புத்தியில் சென்று பதியும் பொருள், கருவி கரணங்களைக் கடந்துநிற்கும் இறைப்பொருள் ஒன்றுமே யாதலின் இங்ஙனம் கூறினார்.

அலங்கல் - தாபத வாகைக்குரிய மாலை. நல்லார்கள் - சிவஞானிகள். கூடல் ஆலவாய் என்பது ஒரு பொருட் பன்மொழி.

9. பொ-ரை: பாம்பணையானாகிய திருமாலும் தாமரை மலரில் எழுந்தருளிய நான்முகனும் முறையே பன்றியாயும் பறவை இனங்களில் மேம்பட்ட அன்னமாயும், அடிமுடிகளை மாறித் தேடியும் நணுக முடியாத நள்ளாறுடைய நம் பெருமானே! நீ மணி ஒலியும், சங்கொலியும், சிறந்த முரசின் ஒலியும் என்றும் இடையறவின்றிக் கேட்கும் சிறப்பினதும் மேம்பட்ட வேந்தர்கள் புகுந்து வழிபடும் பெருமையதும் ஆகிய கூடல் ஆலவாயின்கண் எழுந்தருளி விளங்கக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: பணி - ஆதிசேடன், வென்றிப் பறவை - ‘திருமுடி கண்டேன்‘ என்று பொய் வென்றியைக் கூறிக்கொண்ட பறவையாகிய அன்னம். பாண்டிய மன்னனிடம் கப்பங்கட்ட வருமன்னர் பலர், பலவகை ஒலிகளோடும் இடையறாதுவருகின்ற, கூடல் என்பதாம்.