பக்கம் எண் :

 7. திருநள்ளாறும் திருவாலவாயும்323


74. தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்

சாதியி னீங்கிய வத்தவத்தர்

நடுக்குற நின்றநள் ளாறுடைய

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்

இரும்பலி யின்பினோ டெத்திசையும்

அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்

ஆலவா யின்க ணமர்ந்தவாறே. 10

75. அன்புடை யானை யரனைக்கூடல்

ஆலவாய் மேவிய தென்கொலென்று

நன்பொனை நாதனை நள்ளாற்றானை

நயம்பெறப் போற்றி நலங்குலாவும்

பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்

பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன

இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்

இமையவ ரேத்த விருப்பர்தாமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

10. பொ-ரை: ஓலைத் தடுக்கைக் கையில் ஏந்தித் திரியும் சமணர்களும் சாக்கியர்களும் மரபு நீங்கிய வீண் தவத்தராவர். அவர்கள் மெய்ந் நெறியாகிய சைவசமயத்தைக் கண்டு அச்சமயிகளின் வழிபடு கடவுளைக் கண்டு நடுக்கம் உறுமாறு திரு நள்ளாற்றுள் விளங்கும் நம் பெருமானே! நீ, நாள் விழாவும், சிறப்பு விழாவும் நன்கு நடைபெற, அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக் கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

கு-ரை: தடுக்கு - ஓலையிருக்கை. சாதியின் நீங்கிய வத்தவத்தர் - தத்தம் மரபின் நீங்கி வீணான தவத்தைச் செய்பவர்கள். எடுக்கும் விழா - நைமித்திகத் திருவிழா, நன்னாள் விழா - நித்தியத் திருவிழா.

11. பொ-ரை: எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவனாம், அரனைக் கூடல் ஆலவாயில் மேவியதற்குக் காரணம் யாதெனக் கேட்டுத் தூய பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும்