பக்கம் எண் :

324திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


திருநள்ளாற்று இறைவனை நயமாகப் போற்றி, நலம் பயக்கும் செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய பூசுரனாகிய ஞானசம்பந்தன் பாடிய இனிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், இமையவர் ஏத்தத் தேவருலகில் விளங்குவர்.

கு-ரை: அன்புடையானை - உலகமே இறைவனுடைய மக்களாதலின் வாற்சல்ய முடையவனை, நயம்பெறப் போற்றி - போற்றுவதில் ஒரு நயம் உண்டாம்படிப் பணிந்து, அல்லது தாம் நலம் பெறப் போற்றி என்றுமாம், இமையவர் ஏத்த இருப்பர் - தேவர்க்கெல்லாம் தேவராய் அவர்கள் தொழ விளங்குவர். இந்திரனார் என்றுமாம்.

திருத்தொண்டர் புராணம்
திருஞானசம்பந்தர் புராணம்

நீடுதிருத் தொண்டர்புடை சூழ அங்கண்

நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று

பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப்

பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில்,

மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு

மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப்

பாடகமெல் லடிஎடுத்துப் பாடி நின்று

பரவினார் கண்ணருவி பரந்து பாய.

- சேக்கிழார்.

சைவசமய நெறி

வெப்பொழிய மீனவற்கு நீறளித்த வேதியன்தாள்
எப்பொழுதும் சிந்திப்பாம் யாம்.

- மறைஞான சம்பந்தர்.