பக்கம் எண் :

 ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை33


அப்பண் முதல் திருமுறையில் இருப்பதே பொருத்தமானதாகும். விவரம் தெரிவதற்கு இங்கு இது குறிக்கப்பட்டுள்ளது.

"துஞ்ச வருவாரும்" எனத் தொடங்கும் திருவாலங்காட்டுத் திருப்பதிகம், பழம்பஞ்சுரத்தில் சேர்க்கப்பட வேண்டும். இப்பதிகத்தை மூன்றாந் திருமுறையில் பழம்பஞ்சுரப் பதிகங்களோடு சேர்த்து, அத்திருமுறையில் உள்ள அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணமைப்புடைய இரு பதிகங்களையும் முதல் திருமுறையில் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிற்கு அடுத்ததாகச் சேர்ப்பதே முறையாகும். இவ்வாறு ஒன்றைக் கழித்து இரண்டு பதிகங்களை முதல் திருமுறையில் சேர்த்தால் முதல் திருமுறைப் பதிகங்கள் 137 ஆகும்.

திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமுறையில் ‘குருவருள்’ என்ற தலைப்பில் சில பாடல்களுக்கு விளக்கம் குறிக்கப்பெற்றது. நிற்க, மேலும் சில திருப்பதிகப் பாடல்களின் அரிய கருத்துக்களை இனிக்காண்போம்.

மூத்த திருப்பதிகம்:

இத்திருமுறையில் எட்டுப் பண்களில் அமைந்த 136 திருப்பதிகங்கள் உள்ளன. அவற்றுள் முதல் திருப்பதிகம் தோடுடைய செவியன் என்பது. ஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பே பண்ணோடு திருப்பதிகம் பாடி நெறிகாட்டியவர் காரைக்காலம்மையார்.

அவர் பாடிய நட்டபாடைப் பண்ணையே முதலில் ஞானசம்பந்தரும் அருளினார். இது பற்றியே அம்மையார் அருளிய திருப்பதிகம் மூத்த திருப்பதிகம் என்ற பெயரைப் பெறுவதாயிற்று.

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலான பதிகங்கள் பத்துப் பாடல்களைக் கொண்டும், சில குறைந்தும் சில கூடியும் அமைந்துள்ளன.

திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பத்துப் பாடல்களோடு பதினொன்றாம் பாடலையும் கொண்டுள்ளது. அதில் பாடியவர் பெயரும் பதிகப்பயனும் கூறப்படுகிறது. பதினொன்றாவது பாடல் திருக்கடைக்காப்பு எனப் பெறும். பலசுருதி எனச் சொல்லப்பெறும்