விழுவார்கள் அஞ்செழுத்துந்
துதித்துய்ந்த படிவிரித்தார்".
பத்தாம் பாடல்:
பத்தாவது திருப்பாடல், சமணம்,
புத்தம் ஆகிய புறச் சமய நெறிகளைக் கடிந்துரைப்பது.
இதனைக் குறித்துச் சேக்கிழார் அருளும் விளக்கத்தைப்
பின்வரும் பாடலால் அறியலாம்.
"வேதகா ரணராய வெண்பிறைசேர்
செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார்
தம்மிலே நலங்கொள்ளும்
போதம்இலாச் சமண்கையர்
புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே எனமொழிந்தார்
எங்கள்பிரான் சம்பந்தர்",
பதிகரணம்:
திருப்புறவம் எனும்
தலத்தில் ‘எய்யாவென்றி’
என்று தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலாகிய
"பொன்னியல்மாடப் புரிசை" என்னும் பாடலில்
மூன்றாம் வரியில் "தன்னியல்பில்லாச் சண்பையர்
கோன்" என்றதனால் ஞானசம்பந்தர் அவனருளே கண்ணாகக்
கொண்டு சீவபோதமற்ற நிலையில் பசுகரணம் அற்றுப்
பதிகரணத்தோடு பாடியவர் என்பதை அகச்சான்றால்
உணரலாம்.
சென்றடையாத திரு:
திருச்சிராப்பள்ளித்
தேவாரம் "நன்றுடையானைத்
தீயதிலானை" என்பது. இறைவன் ஒருவனே தீதில்லாத
நன்றே உடையவன் என்பதை இது விளக்குகின்றது.
உடன்பாட்டு வினையால் நன்றுடையான் என்றவர்,
எதிர்மறைவினையால் தீயது இல்லான் என்றும் கூறி,
இறைவனின் இயல்பை, உடன்பாட்டினாலும், எதிர்மறையாலும்
வலியுறுத்தியுள்ளார்.
இப்பாடலில் "சென்றடையாத திருவுடையான்"
என்கிறார். இதற்கு ஒருபொருள் அவனே அருளினாலன்றி
நாமே சென்று அடைய முடியாத திருவை உடையான் என்பது.
இக்கருத்தைத்
"தாமே தருமவரைத்
தன்வலியி
னால்கருதல்
ஆமே? இவன் ஆர் அதற்கு"
என்ற திருவருட்பயன்
பாடலால் அறியலாம்.
நம்பியாண்டார்
|