திரும்பாம்புரம்
என்னும் தலத்தை வணங்கிக்கொண்டு பிள்ளையார்
திருவீழிமிழலைக்கு அப்பருடன் எழுந்தருள
அந்தணர்கள் எதிர் கொண்டழைத்தார்கள்.
பிள்ளையார் சிவிகையினின்றிழிந்து அந்தணர்கள்
புடைசூழ விண்ணிழிந்த கோயிலை வலங்கொண்டார்.
வியந்தார். கீழேவிழுந்து வணங்கினார்.
உள்ளத்தில் உணர்ச்சி பொங்கி வழிந்தது. இசை
ஆயிற்று. "சடையார் புனல் உடையான்"
என்றெடுத்துச் சந்த இசைத் தமிழைச் சாற்றி
மணவாளப் பெருமானது திருவடிக்கீழ் ஆனந்த
வெள்ளத்தாடினார்.
பண்: நட்டபாடை
பதிக எண்: 11
திருச்சிற்றம்பலம்
108. சடையார்புன
லுடையானொரு
சரிகோவண
முடையான்
படையார்மழு
வுடையான்பல
பூதப்படை யுடையான்
மடமான்விழி
யுமைமாதிட
முடையானெனை
யுடையான்
விடையார்கொடி
யுடையானிடம்
வீழிம்மிழ லையே.
1
__________________________________________________
இத்திருப்பதிகத்தின்
பத்துப் பாடல்கள், பல்வகைப் பெருமைகளையும் உடைய
சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம் திருவீழிமிழலை
என்கின்றது.
1. பொ-ரை:
சடைமுடியில் கங்கையைத் தரித்தவனும், இடையினின்று
சரிந்து நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை
அணிந்தவனும், மழுப் படையை உடையவனும், பலவகையான
பூதங்களைப் படையாகக் கொண்டவனும், மடமைத்
தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை
உடைய உமையம்மையாகிய பெண்ணை