பக்கம் எண் :

 11. திருவீழிமிழலை351


109. ஈறாய்முத லொன்றாயிரு

பெண்ணாண்குண மூன்றாய்

மாறாமறை நான்காய்வரு

பூதம்மவை யைந்தாய்

ஆறார்சுவை யேழோசையொ

டெட்டுத்திசை தானாய்

வேறாயுட னானானிடம்

வீழிம்மிழ லையே. 2

__________________________________________________

இடப்பாகத்தே கொண்டவனும், என்னை ஆளாக உடையவனும், விடைக் கொடி உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை.

கு-ரை: சடையார் புனல் - சடைக்கண் நிறைந்த கங்கை. படையார் மழு என்றது தீப்பிழம்பன்று; எரியாகிய படை என்பதை விளக்க. இடம் - இடப்பாகத்து. எனை உடையான் - என்னை அநாதியே ஆளாக உடையவன். விடையார் கொடி - இடபக்கொடி. இது இறைவனுக்குரிய அடையாளக்கொடி, இறைவன் தருமஸ்வரூபியாதலால் அறவடிவான காளை அவன் கொடிக்கண்ணதாயிற்று.

2. பொ-ரை: ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும் பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய் உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை.

கு-ரை: ஈறாய் - உலகத்துயிர்களெல்லாம் தன்னிடத்து ஒடுங்கத் தான் ஒருவனே நிற்றலின் இயங்குவ நிற்பவான எல்லாவற்றிற்கும் தான் இறுதியாய். முதல் ஒன்றாய் - இறுதியாக நிற்பவனே உலக காரணனாய் (முதலாய்) நிற்குந் தன்மையன் ஆதலின் ஒடுங்கிய உலகமெல்லாம் மீளத்தோன்றுதற்குக் காரணமான (முதற்) பொருள் தானொருவனேயாய். பெண் ஆண் இரண்டாய் என்பது இரு பெண் ஆண் (ஆய்) என நின்றது. குணம் மூன்றாய் - சத்துவ முதலிய குணங்கள் மூன்றாய். மாறா மறை நான்காய் - தம்முள் மாறுபடாத வேதங்கள் நான்குமாய். அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்