110. வம்மின்னடி
யீர்நாண்மல
ரிட்டுத்தொழு
துய்ய
உம்மன்பினொ
டெம்மன்புசெய்
தீசன்னுறை
கோயில்
மும்மென்றிசை
முரல்வண்டுகள்
கெண்டித்திசை
யெங்கும்
விம்மும்பொழில்
சூழ்தண்வயல்
வீழிம்மிழ லையே.
3
__________________________________________________
என்பன. மாறா மறை -
என்றும் ஒரு படித்தான வேதம் எனினுமாம். வருபூதம்
அவை ஐந்தாய் - தத்தம் காரணமாகிய
புலன்களிலிருந்து தோன்றுகின்ற பூதம் ஐந்தாய். ஆறு
ஆர் சுவை - ஆறாக அமைந்த சுவை(ஆய்); அவை, அறுவகையான
நாப்பொறி கவரும் உப்பு, துவர்ப்பு, கார்ப்பு,
கைப்பு, புளிப்பு, தித்திப்பு என்பன. ஏழ் ஓசை -
சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம்,
தைவதம், நிஷாதம் என்ற ஓசைகள் ஏழு. குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன
தமிழ்நூல் வழக்கு. எட்டுத்திசை - மாயாகாரியமான
உலகத்தில் காணப்பெறும் எட்டுத்திசை. தானாய் -
ஒன்றாய். வேறாய் - அவற்றின் வேறாய். உடனானான் -
உடனாய் நிற்பவன். இறைவன் கண்ணும் ஒளியும்,
கதிரும் அருக்கனும், ஒளியும் சூடும்போல
உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளை
உணர்த்தியவாறு. இப்பாடல் எண்ணலங்காரம் பட
வந்தது.
குருவருள்:
இப்பாடலில் ‘ஈறாய் என்பது முதல் எட்டுத்திசை
தானாய்‘ என்பது முடிய இறைவன் அவையே தானேயேயாய்ப்
பிரிப்பின்றி உடலும் உயிரும் போல்
ஒன்றாயிருந்து அருள் புரியும் நிலையையும், காணும்
ஒளியாகிய கண்ணுக்குக் காட்டும் ஒளியாகிய சூரியன்
வேறாயிருந்து உதவுவது போல் இறைவன் வேறாயிருந்து
அருள்புரியும் நிலையையும், கண் ஒளி ஒரு பொருளைப்
பார்த்தாலும் அக்கண் ஒளியுடன் உடனாய் உயிர்
கலந்தாலன்றி, கண் காணாதவாறு போல இறைவன்
உயிர்களுடன் உடனாயிருந்து அருள்புரியும்
நிலையையும் உணர்த்துகின்றார் ஞானசம்பந்தர்.
3. பொ-ரை:
அன்றலர்ந்த மலர்களைச் சாத்தி வணங்கி உய்தி
பெற அடியவர்களே வாருங்கள். உயர்ந்த உம் அன்போடு
எம் அன்பையும் ஏற்றருளும் இறைவன் உறையும்
கோயில், மும் என்ற ஒலிக்குறிப்போடு இசைபாடும்
வண்டுகள் மலர்களைக் கிளறுவதால்
|