பக்கம் எண் :

 11. திருவீழிமிழலை353


111. பண்ணும்பத மேழும்பல

வோசைத்தமி ழவையும்

உண்ணின்றதொர் சுவையும்முறு

தாளத்தொலி பலவும்

மண்ணும்புன லுயிரும்வரு

காற்றுஞ்சுடர் மூன்றும்

விண்ணும்முழு தானானிடம்

வீழிம்மிழ லையே. 4

__________________________________________________

திசையெங்கும் மணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததும், தண்ணிய வயல்களைக் கொண்டதுமாகிய திருவீழிமிழலை.

கு-ரை: இது அடியார்களை அழைத்து அறிவித்தது. நாண் மலர் -அன்று அலர்ந்த புதுப்பூ. அடியீர் உம் அன்பினொடு மலரிட்டுத் தொழுதுய்ய வம்மின் எனக்கூட்டுக. அன்றி, உம் அன்பினொடு எம்மன்பு செய்து இட்டுத் தொழுது உய்யவம்மின் என்றுமாம். செய்து செய்ய எனத்திரிக்க. மும்மென்பது ஒலிக்குறிப்பு. முரல் - ஒலிக்கின்ற. கெண்டி - மகரந்தங்களைக் கிளறி. வண்டு முரல் பொழில் சூழ் மிழலை எனவே புதுப்பூவிற்குக் குறைவில்லை. ஆதலால் உம்மன்பினொடு இட்டுத் தொழுவதே வேண்டப்படுவது என்பது குறிப்பு. எம்மன்பு செய்து என்றதற்கு, எம்மன்பின் பயனாக எழுந்த திருப்பாடல்களைப் பாடிக்கொண்டே என்பது பொருளாம். பின்னர்த் திருக்கடைக்காப்பில் ‘தமிழ்பத்தும் இசை வல்லார் சொலக்கேட்டார் வினைபோயிட வான் அடைவார்‘ என்று அருள்வாராதலின் இதுவே கருத்தாதல் துணிபாம்.

4. பொ-ரை: இசையும், அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும் வல்லோசை, மெல்லோசை முதலியனவற்றையுடைய தமிழும் உள்ளத்துணர்வாகிய சுவையும், பொருந்திய தாள வேறு பாட்டு ஒலிகளும், மண், புனல், உயிர், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய இறைவனது இடம் திருவீழிமிழலை.

கு-ரை: பண் - இசை. பதம் ஏழு - ஸ்வரஸ்தானங்கள் ஏழு. பதம் - தானம். பல ஓசைத்தமிழ் - வல்லோசை, மெல்லோசை, இடையோசை முதலிய வேறுபாடுகளையுடைய தமிழ். உள் நின்றது ஓர் சுவை - பண்ணைச் சுரத்தானங்களில் நின்று ஆலத்தி பண்ணி, பல ஓசை