பக்கம் எண் :

 12. திருமுதுகுன்றம்363


122. சுரர்மாதவர் தொகுகின்னர

ரவரோதொலை வில்லா

நரரானபன் முனிவர்தொழ

விருந்தானிட நலமார்

அரசார்வர வணிபொற்கல

னவைகொண்டுபன் னாளும்

முரசார்வரு மணமொய்ம்புடை

முதுகுன்றடை வோமே. 4

123. அறையார்கழ லந்தன்றனை

அயின்மூவிலை யழகார்

கறையார்நெடு வேலின்மிசை

யேற்றானிடங் கருதில்

முறையாயின பலசொல்லியொண்

மலர்சாந்தவை கொண்டு

முறையான்மிகு முனிவர்தொழு

முதுகுன்றடை வோமே. 5

__________________________________________________

ஒண்தளை - மாயை. ஆணவக் கட்டினின்றும் ஆன்மாவை விடுவிப்பதற்குத் துணை செய்வதால் மாயையை ஒண்தளை என்றார்.

4. பொ-ரை: தேவர்களும், சிறந்த தவத்தை மேற் கொண்டவர்களும், கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும், மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம், அழகிய அரசிளங்குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்ட வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

கு-ரை: தொகு கின்னரர் - எப்பொழுதும் கூட்டமாகவே இருந்து கின்னரி பயிலும் தேவகூட்டத்தார்.

5. பொ-ரை: ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம்