பக்கம் எண் :

364திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


124. ஏவார்சிலை யெயினன்னுரு

வாகியெழில் விசயற்

கோவாதவின் னருள்செய்தவெம்

மொருவற்கிட முலகில்

சாவாதவர் பிறவாதவர்

தவமேமிக வுடையார்

மூவாதபன் முனிவர்தொழு

முதுகுன்றடை வோமே. 6

__________________________________________________

முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

கு-ரை: இப்பாட்டின் முன்னடியிரண்டிலும், அந்தகனை முத்தலைச் சூலத்தின் உச்சியில் தாங்கிய வரலாறு குறிப்பிடப்படுகிறது. அந்தன் - அந்தகாசுரன். அயில் - கூர்மை. வேலுக்கு அழகு இவ்வண்ணம் தண்டிக்கத் தக்கவர்களைத் தண்டித்தல். முனிவர் மறையாயின சொல்லி, மலர்ச் சாந்துகொண்டு முறையான் தொழு முதுகுன்று எனக் கூட்டுக.

அந்தகாசுரன் தன்தவமகிமையால் தேவர்களை வருத்தினான். தேவர்கள் பெண்வடிவந்தாங்கி மறைந்து வாழ்ந்தனர். பின் அவர்கள் வேண்டுகோட்கிரங்கிச் சிவபெருமான் பைரவருக்கு ஆணையிட அவர் தனது முத்தலைச் சூலத்திற் குத்திக் கொணர்ந்தார். அவன் சிவனைக் கண்டதும் உண்மை ஞானம் கைவரப் பெற்றான். கணபதியாம் பதவியை அளித்தார் என்பது வரலாறு. (கந்தபுராணம்.)

6. பொ-ரை: அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.

கு-ரை: இதில் இறைவன் வேடவுருத்தாங்கிப் பன்றியை எய்து வீழ்த்தி அருச்சுனன் தவங்கண்டு வந்து பாசுபதம் அருளிய வரலாறு குறிக்கப்பெறுகின்றது. ஏ - அம்பு. சிலை - வில். எயினன் - வேடன். விசயற்கு - அருச்சுனற்கு. ஓவாத - கெடாத. சாவாதவர்களும், மீட்டும்