பக்கம் எண் :

 12. திருமுதுகுன்றம்365


125. தழல்சேர்தரு திருமேனியர்

சசிசேர்சடை முடியர்

மழமால்விடை மிகவேறிய

மறையோனுறை கோயில்

விழவோடொலி மிகுமங்கையர்

தகுமாடக சாலை

முழவோடிசை நடமுன்செயு

முதுகுன்றடை வோமே. 7

126. செதுவாய்மைகள் கருதிவ்வரை

யெடுத்ததிற லரக்கன்

கதுவாய்கள்பத் தலறீயிடக்

கண்டானுறை கோயில்

மதுவாயசெங் காந்தண்மலர்

நிறையக்குறை வில்லா

முதுவேய்கண்முத் துதிரும்பொழின்

முதுகுன்றடை வோமே. 8

__________________________________________________

பிறப்பெய்தாதவர்களும், ஆகத் தவமிக்க முனிவர்கள்; என்றும் இளமை நீங்காத முனிவர்கள் தொழும் முதுகுன்றம் என்றவாறு.

7. பொ-ரை: தழலை ஒத்த சிவந்த திருமேனியரும், பிறைமதி அணிந்த சடைமுடியினரும், இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும், வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில், விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடனசாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.

கு-ரை: தழல் சேர்தரு திருமேனியர் - தழலை ஒத்த செந்நிற மேனியை யுடையவர். ‘தழல்வண்ண வண்ணர்‘ என்றதும் அது நோக்கி. சசி - சந்திரன். மழ மால் விடை - இளைய பெரிய இடபம். ஆடகசாலை - நடனசாலை.

8. பொ-ரை: பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றி அடர்த்த சிவ