பக்கம் எண் :

 ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை37


"வல்லதோர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே". இது பொதுவாக வினையினால் வரும் துன்பம் நீங்கும் என்கிறது.

‘தோடுடைய செவியன்’ கடைசிப் பாடலில், தொல்வினை - பழவினை தீர்தல் எளிதாம் என்றறிவித்துள்ளமை காண்க. திருநள்ளாற்றுப் போகமார்த்த பூண்முலையாள் என்னும் பதிகக் கடைசிப் பாடலில் "உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே" உண்பு - பிராரத்தவினை. இதில் பிராரத்த வினை நீங்கும் என்கிறார்.

"கண்ணார் கோயில் கைதொழு வார்கட் கிடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை யாய நணுகும்மே"

என்பதனால் ஆகாமியமாகிய எதிர்வினை நணுகாது என்கிறார் ஞானசம்பந்தர். இவ்வாறு பலபாடல்களால் சஞ்சித, ஆகாமிய, பிராரத்த வினைகள் நீங்கும் என்பதை இம்முதல் திருமுறையிலேயும் குறிப்பிட்டுள்ளமையை, ஓதி உணர்ந்து கொள்க. மூவினையும் முற்றிலும் நீங்காது. நீங்கினால் பிறவி இல்லையாகி விடும். எனவே இலேசாகத் தாக்கும் என்பதையே நீங்கும் என்பதற்குப் பொருளாகக் கொள்க.

முப்பொருளியல்பு:

திருமுதுகுன்றப் பதிகமாகிய ‘மத்தாவரை நிறுவி’ என்ற பதிகத்துள் ‘விளையாததொர் பரிசில் வரு பசு’ என்ற பாடலால் ஒருகாலத்தே தோன்றி விளையாதனவாயுள்ளவற்றை அறிவிக்கிறார். ஒன்று பசு - உயிர். இரண்டு பாசம் - ஆணவம். மூன்று வேதனை - நல்வினை, தீவினையாகிய இருவினை. நான்கு ஒண்தளை - மாயை. ஐந்து பாசமாகிய ஆணவம்; ஆறு இவை உயிரைப் பற்றாமல் தவிருமாறு அருள்கின்ற தலைவனாகிய சிவன். இவன் முதுகுன்றத்தில் எழுந்தருளியுள்ள பழமலைநாதன் என்றருள்கின்றார். அப்பாடல் வருமாறு:

"விளையாததொர் பரிசில்வரு பசு, பாச, வே தனை, ஒண்
தளை, யாயின தவிரஅருள் தலைவன்,னது சார்பாம்
களை யார்தரு கதிராயிரம் உடைய அவனோடும்
முளைமாமதி தவழும்உயர் முதுகுன்றடை வோமே."

திருக்கழுமலத் திருப்பதிகமாகிய "சேவுயரும்" என்னும்