பக்கம் எண் :

 15. திருநெய்த்தானம்385



153. பறையும்பழி பாவம்படு

துயரம் பலதீரும்

பிறையும்புன லரவும்படு

சடையெம்பெரு மானூர்

அறையும்புனல் வருகாவிரி

யலைசேர்வட கரைமேல்

நிறையும்புனை மடவார்பயில்

நெய்த்தானமெ னீரே. 2

154. பேயாயின பாடப்பெரு

நடமாடிய பெருமான்

வேயாயின தோளிக்கொரு

பாகம்மிக வுடையான்

__________________________________________________

என்றது இறைவன் உரித்துப் போர்த்ததால் நிலைத்த புகழ் கொண்டமையின். செய் - வயல். நெய்யாடிய பெருமான் என்பது இத்தலத்து இறைவன் திருநாமம். நெய்த்தானம் எனத் தலப்பெயரைச் சொல்லுங்கள் போதும் என்கின்றார்கள்.

2. பொ-ரை: காவிரி வடகரை மேல் உள்ள எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுமின் பழி பாவம் தீரும் என வினை முடிபு காண்க.

ஆரவாரத்துடன் வரும் புனலின் அலைகள் சேரும் காவிரி வடகரையில் விளங்குவதும், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுமின்; பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

கு-ரை: பறையும் - கழியும், அறையும் - ஒலிக்கும், நிறையும் புனைமடவார் - மனத்தைக் கற்பு நெறிக்கண் நிறுத்துவதாகிய நிறைக்குணத்தால் தம்மை ஒப்பனை செய்த மடவார்.

3. பொ-ரை: ஊழிக் காலத்து, பேய்கள் பாட, மகா நடனம் ஆடிய பெருமானும், மூங்கில் போலத் திரண்ட தோள்களை உடைய உமை