பக்கம் எண் :

386திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)



தாயாகிய வுலகங்களை

நிலைபேறுசெய் தலைவன்

நேயாடிய பெருமானிடம்

நெய்த்தானமெ னீரே. 3

155. சுடுநீறணி யண்ணல்சுடர்

சூலம்மன லேந்தி

நடுநள்ளிருள் நடமாடிய

நம்பன்னுறை யிடமாம்

கடுவாளிள வரவாடுமிழ்

கடனஞ்சம துண்டான்

நெடுவாளைகள் குதிகொள்ளுயர்

நெய்த்தானமெ னீரே. 4

__________________________________________________

யம்மைக்குத் தனது திருமேனியின் ஒரு பாகத்தை வழங்கியவனும், அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை நிலைபேறு செய்தருளும் தாய் போன்ற தலைவனும், அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைப் பலகாலும் சொல்வீராக.

கு-ரை: பெருநடம் - மகாப்பிரளய காலத்துச் செய்யப்பெறும் மகாநடனம், வேய் - மூங்கில். அவ்வுலகங்களைத் தாயாகி நிலைபேறு செய்ததலைவன் எனக் கூட்டுக. நெய்யாடிய என்பது எதுகை நோக்கி நேயாடிய என்றாயிற்று. நே - அன்பு. அன்பே அபிடேக மாதல் ஞானப் பூசையிலுண்டு.

4. பொ-ரை: சுடப்பட்ட திருநீற்றை அணியும் தலைமையானவனும் ஒளி பொருந்திய சூலம் அனல் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி இருள் செறிந்த இரவின் நடுயாமத்தே நடனம் ஆடும் நம்பனும், கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான் உறையும் இடமாகிய நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் மிக்க நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்வீராக.

கு-ரை: சுடுநீறு - சுட்டநீறாகிய விபூதி. நடுநள்ளிருள் - அர்த்த யாமம். நடுநள் - ஒருபொருட் பன்மொழி. நள் - செறிவுமாம். நம்பன் -