பக்கம் எண் :

 15. திருநெய்த்தானம்387



156. நுகராரமொ டேலம்மணி

செம்பொன்னுரை யுந்திப்

பகராவரு புனல்காவிரி

பரவிப்பணிந் தேத்தும்

நிகரான்மண லிடுதண்கரை

நிகழ்வாயநெய்த் தான

நகரானடி யேத்தந்நமை

நடலையடை யாவே. 5

157. விடையார் கொடி யுடையவ்வணல்

வீந்தார்வெளை யெலும்பும்

உடையார்நறு மாலைசடை

யுடையாரவர் மேய

புடையேபுனல் பாயும்வயல்

பொழில்சூழ்ந்தநெய்த் தானம்

அடையாதவ ரென்றும்அம

ருலகம்அடை யாரே. 6

__________________________________________________

நம்பப்படத்தக்கவன், விருப்பிற்குரியன். கடுவாள் இளஅரவு ஆடு உமிழ்நஞ்சு - கொடிய ஒளிபொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த அடுதலை உடைய நஞ்சம்.

5. பொ-ரை: நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வது போல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.

கு-ரை: நுகர் ஆரம் - நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், பகரா வரும் - விலை கூறிவருகின்ற. நிகரான் மணல் - ஒருவிதமான மணல். நடலை -துன்பம்.

6. பொ-ரை: இடபக் கொடியை உடைய அண்ணலும், மணம் கமழும் மாலைகளைச் சடைமேல் அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும், அருகிலுள்ள கண்ணிகளிலும் வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும் வயல்கள் பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய நெய்த்தானம்