158. நிழலார்வயல் கமழ்சோலைகள்
நிறைகின்றநெய்த் தானத்
தழலானவ னனலங்கையில்
ஏந்தியழ காய
கழலானடி நாளுங்கழ
லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய
ரின்றித்தொழு வாரே. 7
159. அறையார்கட லிலங்கைக்கிறை
யணிசேர்கயி லாயம்
இறையாரமு னெடுத்தானிரு
பதுதோளிற வூன்றி
__________________________________________________
என்னும் தலத்தை அடையாதவர் எக்காலத்தும்
வீட்டுலகம் அடையார்.
கு-ரை: உடைய அண்ணல், உடையவ்
வணல் என விரித்தல் தொகுத்தல் விகாரம் வந்தன
சந்தம் நோக்கி. வீந்தார் - இறந்தவர்களாகிய
பிரமவிஷ்ணுக்களது. வெளை; வெள்ளை என்பதன்
தொகுத்தல். நெய்த்தானம் அடையாதவர்
அமருலகம் அடையார் என எதிர்மறைமுகத்தால் பயன்
கூறியவாறு. அமருலகம், தேவருலகம் என்பாரும்
உளர். விரும்பிய தலமாகிய வீடென்பதே
பொருந்துவதாம்; அமரர் உலகு என்னாது
அமருலகென்றே இருத்தலின்.
7. பொ-ரை: பயிர் செழித்து வளர்தலால்
ஒளி நிறைந்த வயல்களும் மணம் கமழும் சோலைகளும் நிறைகின்ற
நெய்த்தானத்தில், தழல் உருவில் விளங்குபவனும்
அனலைத் தன் கையில் ஏந்தியவனும் அழகிய வீரக்
கழல்களை அணிந்தவனும் ஆகிய சிவபிரானது திருவடிகளை
நாள்தோறும் தவறாமலும் மறவாமலும் தொழுதலை உடைய
அடியவர் எந்நாளும் துயரின்றி மற்றவர்களால் தொழத்தக்க
நிலையினராவர்.
கு-ரை: கழலாதே - நீங்காதே. விடல்
இன்றி - இடைவிடாமல். தொழலார் அவர் - தொழுதலையுடைய
அடியார்கள்.
8. பொ-ரை: அழகிய கயிலாய மலையைத்
தன் இருபது முன் கரங்களாலும் பெயர்த்து எடுத்த ஓசை
கெழுமிய கடல் சூழ்ந்த
|