161. மத்தம்மலி சித்தத்திறை
மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி
பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை
நெய்த்தானம தேத்தும்
சித்தம் முடை யடியாருடல்
செறுநோயடை யாவே. 10
162. தலமல்கிய புனற்காழியுட்
டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு
நெய்த்தானனை நிகரில்
__________________________________________________
10. பொ-ரை: சித்தத்தில்
செருக்குடையவரும், சிறிதும் மதியில்லாதவரும்
ஆகிய சமணர்களும், புத்தர்களும் கூறும்
பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக நினையாதீர்.
நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு, குற்றமற்ற
சிவபிரான் உறையும் நெய்த்தானத்தை வணங்கிப்
போற்றும் சித்தத்தை உடைய அடியவர் உடலைத்
துன்புறுத்தும் நோய்கள் அடையா.
கு-ரை: மத்தம் - மதம். இறைமதியில்லார்
- கடவுளுணர்ச்சி சிறிதும் இல்லாதவர்கள். செறுநோய்
- வருத்தும் நோய்கள்.
குருவருள்: "உருகும் மனம் உடையார்
தமக்கு உறுநோய் அடையாவே" என்ற பிள்ளையார்
இங்கு "நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானமதேத்தும்
சித்தம்முடை அடியார்உடல் செறுநோய் அடையாவே"
என்று கூறுதல் சிந்திக்கத்தக்கது. இறைவழிபாட்டில்
ஈடுபாடுள்ள அடியவர்களை உறத்தக்க நோயும் செறத்தக்க
நோயும் அடையா என்பதைத் தெளிவித்த வாறறியலாம்.
11. பொ-ரை: தலங்களில் சிறந்த
புனல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன்
உலகெங்கும் பரவிய புகழால் மிக்க நெய்த்தானத்துப்
பெருமான் மீது பாடிய ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத்
தரும் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும்
பரவவல்லவர் சீலம் நிறைந்த செல்வன் அடியாகிய
சிவகதியைச் சேர்வர்.
|