167. மெய்த்தன்னுறும் வினைதீர்வகை
தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில்
கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல
பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம்
ஆலந்துறை யதுவே. 5
168. மன்னானவ னுலகிற்கொரு
மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன்
பொழில்சூழ்புள மங்கை
என்னானவ னிசையானவ
னிளஞாயிறின் சோதி
அன்னானவ னுறையும்மிடம்
ஆலந்துறை யதுவே. 6
__________________________________________________
5. பொ-ரை: உயிர் உடலை அடுத்தற்குக்
காரணமான வினைகள் நீங்கும் வகையில் பெருமானை
நீவிர் வணங்குவீர்களாக. செழுமையான மலர்க்
கொத்துக்களை உடைய சந்தனம், அகில் முதலியவற்றைக்
கொண்டு வரும் காவிரியாற்றின் கரைமேல் உள்ளதும்
பொந்துகளில் ஆந்தைகள் பல தங்கிப் பாடுவதும் ஆகிய
ஆலந்துறையில் அமைந்த புள்ளமங்கை என்னும்
கோயிலை இடமாகக் கொண்டுள்ள தலைவனாகிய
சிவபெருமான் நம்மை ஆள்வான்.
கு-ரை: மெய் - உண்மையாகவே, அல்லது
உடலானது உயிரை அடுத்தற்குக் காரணமாகிய
வினைதீரும்வகை என்றுமாம். தொழுதற்கேற்ற சாதனப்
பொருள்களைத் தேடிச்செல்ல வேண்டாம்.
காவிரியே சந்தனம், பூங்கொத்து, அகில் முதலியவற்றைக்
கொணர்ந்து தருகின்றது. அவற்றைக் கொண்டு நீவிர்
தொழவேண்டும் என்பதுதான் கருத்து.
6. பொ-ரை: உலகிற்குத் தான்
ஒருவனே மன்னனாய் விளங்குபவனும், மழையாய்ப்
பயிர்களை விளைவிப்பவனும், குற்றமற்ற
பொன்னானவனும், உயிர்களுக்கு வாழ்முதலாக உள்ளவனும்,
|