169. முடியார்தரு சடைமேன்முளை
யிளவெண்மதி சூடிப்
பொடியாடிய திருமேனியர்
பொழில்சூழ்புள மங்கைக்
கடியார்மலர் புனல்கொண்டுதன்
கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம்
ஆலந்துறை யதுவே. 7
170. இலங்கைமனன் முடிதோளிற
வெழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை யடர்த்தானிடம்
வேதம்பயின் றேத்திப்
__________________________________________________
எனக்குத் தலைவனாய் இசை வடிவாக
விளங்குபவனும், இளஞாயிற்றின் ஒளியைப்
போன்ற ஒளியினனுமாகிய சிவபெருமான் உறையும் இடம்,
ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.
கு-ரை: உலகிற்கு ஒரு மன்னானவன்
மழையானவன் எனக் கூட்டுக. பிழையில் பொன் -
குற்றமற ஓடவிட்ட பொன்னாகிய சாம்பூநதம் முதலியன.
என் ஆனவன் - எனக்குத் தலைவனானவன்.
7. பொ-ரை: தலைமேல் விளங்கும்
சடைமிசை முளை போன்ற இளம்பிறையைச் சூடி வெள்ளிய
திருநீறு அணிந்த திருமேனியனாய், மணம் கமழும்
மலர்களையும் நீரையும் கொண்டு தன் திருவடிகளை வணங்கி
ஏத்தும் அடியார்களுக்கு இனியனாய் விளங்கும்
சிவபெருமான் விரும்பி உறையும் இடம் பொழில் சூழ்ந்த
ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும்.
கு-ரை: முளைஇளவெண்மதி - முளைவடிவான
இளைய பிறை. பொடி - திருநீறு. திருமேனியர்,
இனியான் என ஒருமை பன்மை மயங்கி வந்தது, செய்யுளாதலின்.
8. பொ-ரை: இலங்கை மன்னனாகிய இராவணனின்
தலைகளும், தோள்களும் நெரிய, எழுச்சி
பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை
அகப்படுத்தி அவனை அடர்த்த சிவபெருமானது
|