உள்ளமே கோயில்:
‘அகனமர்ந்த
அன்பினராய்’ எனத்தொடங்கும் திருவீழிமிழலை
மேகராகக் குறிஞ்சிப்பண்ணிலுள்ள பாடலில்,
இறைவன் எத்தகைய உள்ளத்தில் எழுந்தருளியிருப்பான்
என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அகத்தில் -
உள்ளத்தில் அன்பும் அறுபகை களைதலும், ஐம்புலன்
அடக்கலும் உளதாயவழியே உண்மைஞானம் கைவரப் பெறுவர்.
அத்தகையோர் உள்ளத்தாமரையிலேயே இறைவன்
குடியிருப்பான் என்கிறது இப்பாடல். அது வருமாறு:
"அகனமர்ந்த அன்பினராய் அறுபகை
செற்று
ஐம்புலனும் அடக்கிஞானம்
புகலுடையோர் தம்உள்ளப்
புண்டரிகத்
துள்ளிருக்கும்
புராணர் கோயில்."
இப்பாடலில்
இறைவனைப் புராணர் என்று குறிப்பிட்டு உள்ளமை அறிந்து
மகிழத்தக்கது.
புரா - நவம் என்ற இருசொல்லே புராணம் என்றாயிற்று.
புராதனம் என்பதன் முதல்பகுதி பழமை குறிப்பது,
நவம் என்பது புதுமை குறிப்பது. எனவே புராணம் என்பது
பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன்
பரம்பொருள் என்பதை உணர்த்துவது. இவ்வாறு பல
அரிய கருத்துக்களை உள்ளடக்கிய முதல் திருமுறை,
"இன்னெடு நன்னுலகெய்
துவரெய்திய போகமும்
முறுவர்கள் இடர்பிணி
துயரணைவ் விலரே"
என நிறைவு பெறுகிறது.
முதல் திருமுறையின் முடிவுப் பதிகம்
"மாதர் மடப்பிடியும்" என்னும் திருத்தருமபுரப்
பதிகம். இது முதல் திருமுறையின் பலன் சொல்வது
போல் முடிந்திருப்பது திருவருட் பொருத்தமாகும்.
இறைவனின் பிணை, துணை, கழல்களை
விரும்பிப் போற்றுபவர், நெடுநன்னுலகெய்துவர்
என்றதனால் வீடுபேறு அடைவர் என்கிறார். இது
இன்ப ஆக்கம். இடர், பிணி, துயர்
அணைவிலர் என்றதனால் துன்ப நீக்கம் குறித்தாராயிற்று.
திருவடியைக் குறிக்கும்போது, பிணை
- துணை - கழல்கள் என எழுவாயை மூன்றாகக் குறித்ததற்கேற்பப்
பயனிலையையும்
|