180. நீறேறிய திருமேனியர்
நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை
கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு
பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய விறைவர்க்கிடம்
இடும்பாவன மிதுவே. 7
181. தேரார்தரு திகழ்வாளெயிற்
றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி
யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு
குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரு மிறைவர்க்கிடம்
இடும்பாவன மிதுவே. 8
__________________________________________________
7. பொ-ரை: நீறணிந்த திருமேனியராய்,
விளங்கும் உலகெங்கணும் சென்று, பருந்து உண்ணவரும்
தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில்
ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத்
தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து
விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம்
இதுவேயாகும்.
கு-ரை: ஏறிய - மிகுந்த. பாறு -
பருந்து. தலை - பிரமகபாலம். கூறு ஏறிய மடவாள்
- தமது திருமேனிக்கண்ணேயே ஒரு பாதியாயமைந்த உமையாளை.
ஒருபாகம் மகிழ்வெய்தி - தன்னின் வேறாக இடப்பாகத்து
வைத்து மகிழ்ந்து, இதனால் சொற்பொருள் போல
அம்மையோடு ஒன்றாய் இருக்குந் தன்மையும்
சொல்லும் பொருளும் போல அம்மையை வேறாக வைத்து
விரும்பும் தன்மையும் விளக்கியவாறு. ஏறு - இடபம்.
8. பொ-ரை: வானவெளியில் தேர்மிசை
ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும்
உடைய அரக்கனாகிய இராவணன், சிவபிரான் எழுந்தருளிய
கயிலை மலையின் சிறப்பை ஓராது, தன் தேர்
|